இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கொரொனா அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஓரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை பெறாதவர்கள் பெற்றுக்கொள்ளுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
ம்ட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” அண்மையில் கொவிட் 19 தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் ஒரு நாள் சம்பளத்தினை ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வியாளர்கள் சம்மதம் இன்றி பெற்றுக் கொண்டமை தொடர்பாக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தோம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு.
இந்த வழக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆகிய பொன்னுத்துரை உதயரூபன், பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அத்தோடு நமது தலைவர் பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு தாக்கலில் சட்டமா அதிபரும் பிரதிவாதியாக குறிப்பிட்டதன் காரணமாக சட்டமா அதிபர் அண்மையில் இது தொடர்பாக சம்மதம் தெரிவித்து மீண்டும் அந்த ஒரு நாள் பெற்றுக்கொண்ட பணத்தினை திருப்பி செலுத்துவதாக உறுதிமொழி உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் மிகக் கூடிய பணத்தொகையாக திருகோணமலை கல்வி வலயத்தில் 2.895 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2.795 மில்லியன் ரூபாவும் கல்முனை கல்வி வலயத்தில் 3.846 மில்லியன் ரூபாவும் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் ஒரு நாள் பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தினை பெரும்பாலான ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்த பணத்தினை பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களும் கல்வி திணைக்களத்தின் உடைய கல்வி பணிப்பாளர்களையோ அல்லது அங்குள்ள கணக்காளர்களையோ சந்தித்து அந்த பணத்தினை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆக குறைந்த பணம் கையளிக்கப்பட்டிருக்கின்றது 95305 ரூபா கல்குடா வலயத்திற்கு ஆக குறைந்த ஒரு நாள் சம்பளத்தினை பெரும்பாலும் அறவிடவில்லை என குறிப்பிடலாம் ஏனைய வலயங்கள் மிகக் கூடுதலான பணத்தினை பெற்றுக் கொண்டிருக்கின்றனர் இந்தப் பணத்தினை ஓய்வு பெற்றவர்களும் அரசாங்க ஊழியர்களும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகலரும் அந்த பணத்தினை மீண்டும் தங்களுடைய குறிக்கப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆசிரியர்கள் அதிபர்கள் தொடர்ச்சியாக அதாவது இலங்கை அரசாங்கத்தினுடைய சில தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போது கைது செய்யப்படுவது வழமையாக இலங்கையில் காணப்படுகின்றது.
எமது பொதுச் செயலாளர் கூட கைது செய்யப்பட்டு முல்லைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் எனவே அடக்கு முறையான ஆட்சியாளர்கள் மத்தியில் எமது நியாயமான ஜனநாயக போராட்டங்களை முறியடிப்பதற்காக நடத்தப்படும் இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக பல்வேறு நாடுகளிலும் பல்வேறு அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆசிரியர்கள் அதிபர்கள் மாத்திரம் அல்ல ஊடகவியலாளர்களும் பல்வேறான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது என்பதும் இலங்கையினுடைய ஜனநாயகம் இன்று ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது என்பதனையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக பல்வேறு அழுத்தங்களை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு அதாவது ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க வாதிகளை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கான சட்டங்களை தற்போது நிறைவேற்றப்பட்டிருப்பதனை இன்று நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இல்லை அதாவது ஏனைய துறைகளை ஒப்பிடும்போது எமது நாட்டை பொறுத்தவரையில் கல்விக்கும் சுகாதாரத் துறைக்கும் அதிக அளவு பணம் செலுத்தப்பட வேண்டும் அதாவது நிதி ஒதுக்கீடுகள் அண்மை காலங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் போது பெரும்பாலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவே இந்த 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற போது போதிய அளவு நிதியும் அடுத்ததாக கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படுகின்றது இவற்றை தவிர்த்து இலங்கை அரசாங்கத்தினுடைய வரவு செலவு திட்டத்தை அவதானிக்கின்ற போது பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது.
அடுத்ததாக பௌத்த மதத்தை மேன்மைப்படுத்துவதற்காக அந்த சாசனத்திற்கும் குறிப்பிட்ட அமைச்சிக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை நாம் பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதோடு வன்மையாக கண்டிக்கின்றோம்.
அடுத்த முறை எமது ஆசிரியர் அதிபர்களுடைய சம்பள முரண்பாடுகளுக்கான தீர்வு இதுவரை வரவு செலவு திட்டத்தில் காணப்படவில்லை எனவே இது எதிர்காலத்தில் தரமான கல்வியையும் இலங்கையினுடைய கல்வி ஒரு அபாயகரமான நிலையை எதிர்நோக்கி இருப்பதை நாங்கள் இங்கு சுட்டிக் காட்ட விரும்புவதோடு இதனை வன்மையாகவும் கண்டிக்கின்றோம்.” என்றார்.