ரஷ்யாவின் வைரங்களுக்கு புதிய தடைகளை விதிக்க ஜி7 நாடுகள் ஒப்புதல்
ரஷ்யாவின் வைரங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட புதிய தடைகளை விதிக்க ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்டன.
G7 தலைவர்கள் தங்கள் கூட்டறிக்கையில், ரஷ்யாவில் வெட்டியெடுக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படும் தொழில்துறை அல்லாத வைரங்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதாகவும், அதைத் தொடர்ந்து மூன்றாம் நாடுகளில் பதப்படுத்தப்பட்ட ரஷ்ய வைரங்களின் இறக்குமதிக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா , கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உள்ளன.
(Visited 6 times, 1 visits today)