மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!
மத்திய மெக்சிகோவின் சில பகுதிகளில் நேற்று (08.12) பிற்பகல், நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநிலமான பியூப்லாவில் 27 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது, 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தினால் மெக்சிகோ தலைநகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதுடன், குடியிருப்பில் இருந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சேதங்கள் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என மெக்ஸிகோ நகர மேயர் மார்டி பாட்ரெஸ் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையில் எழுதியுள்ளார்.
மெக்சிகோ நகரம் முழுவதும் பூகம்ப அலாரங்கள் ஒலிக்கப்பட்டதுடன், மக்கள் வணிகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறியதாக குறிப்பிடப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)