இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த முறைமையின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களால் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)