வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் மரணம்

அமெரிக்காவின் Las Vegas உள்ளNevada பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரென்று நம்பப்படுகிறது.

என்ன காரணத்துக்காக அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் விசாரணை தொடர்கிறது.

தற்போது நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியு்ளளனர்.

அதிகாலை சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழகமும் மாநிலத்திலுள்ள இதர நெவாடா கல்வி நிலையங்களும் ஒருநாள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்கள் பாதுகாப்புக்காக உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!