உலகம் செய்தி

காசா போரின் நடுவே மத்திய கிழக்கிற்குச் சென்ற புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு இந்த நாட்களில் நடந்து வருகின்றது.

எனினும், ரஷ்ய ஜனாதிபதி அத்தகைய நிகழ்வில் பங்கேற்பாரா அல்லது அவரது மத்திய கிழக்கு பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை.

உக்ரைனில் போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை கடுமையாக மட்டுப்படுத்தினார்.

மேலும், போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால் ரஷ்ய அதிபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயத்தின் போது, ​​ரஷ்ய ஜனாதிபதி சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு மற்றும் காசா போர் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி