செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான இந்திரா காந்தி சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு பொதுமக்கள் தண்ணீர் தாகம் தனிய மாநகரப் பகுதி செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.

இவற்றில் இளநீர், தர்பூசணி, கீரைக்காய், பனைநுங்கு, மோர், குளிர்பானங்கள், பழரசம் என வெயிலுக்கு குளுமைதரும் பானங்களாக பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேலும் அதிமுக சார்பில் மாநகர பகுதி நிர்வாகிகளிடம்  உறுப்பினர் அட்டை புதுப்பிக்கும் விண்ணப்ப படிவம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கி விருப்பமுள்ள பொதுமக்கள், இளைஞர்கள் அதிமுகவில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ள சிறப்பு.

முகாம்களை அமைத்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என படிவத்தினை முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் வழங்கினார்.

இன் நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் ஸ்டாலின், ஜெயராஜ் உள்ளிட்ட மாவட்ட, நகர, பேரூர் அதிமுக செயலாளர்கள், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி