இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் கைது
போலி வீசாக்களை பயன்படுத்தி கத்தார் டோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமானப் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ மற்றும் வட்டுபிட்டிவல பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அவர்கள் தோஹாவுக்கு புறப்படவிருந்தனர்.
கட்டார் எயார்வேஸ் அதிகாரிகளுக்கு விமான அனுமதிப் பணிகளுக்காக சமர்பிக்கப்பட்ட இரண்டு இத்தாலிய விசாக்களையும், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லை ஆய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில், இந்த இரண்டு விசாக்களும் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில், தரகர் ஒருவரிடம் தலா 40 லட்சம் ரூபாய் மற்றும் 80 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த இரண்டு விசாக்களையும் ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.