புத்தளம்- கற்பிட்டி பகுதியில் புதையல் தோண்டிய 9 பேர் கைது

புத்தளம் – கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் இன்று (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தும்மலசூரிய மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)