தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் மழை : வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்படவேண்டிய விமானங்களும், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கனமழை காரணமாக ரயில் சேவைகளும் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மிக்ஜாம் புயலானது தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை (05) புயல் மேலும் தீவிரமடைந்து தெற்கு ஆந்திராவின் நெல்லூர் – மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது.
இதன்காரணமாக தற்போதைய மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.