2023ம் ஆண்டிற்கான சர்வதேதச மனக்கணித போட்டியில் யாழ் மாணவன் சாதனை

2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த
சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டி வெற்றிகளில் யாழ். திருநெல்வேலி UCMAS கிளை முன்னணி வகிக்கின்றது.
(Visited 10 times, 1 visits today)