பிரித்தானிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
பிரித்தானியாவில் கனமழைக்கு பிறகு தென்மேற்கு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அமலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் டெவோன் மற்றும் சோமர்செட் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
யார்ட்டி நதி, ரிவர் யோ மற்றும் ஷ்ரீன் நீர் ஆகியவை வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
Gov.uk இணையதளத்தின்படி, இங்கிலாந்து முழுவதும் தற்போது 22 வெள்ள எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையி்ல் பாதுகாப்பாக இருக்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக டெவோனில் உள்ள யார்கோம்பே மற்றும் ஆக்ஸ்மின்ஸ்டர் இடையே உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)