ஜெர்மனியில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் சட்டவிரோதமான குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கையானது பாரியளவில் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் மாதம் 16ஆம் திகதி இந்த எல்லை சோதனைகளை அவர் உபயோகித்ததன் விளைவாக இதுவரை காலமும் மொத்தமாக 14 492 பேர் வரையே ஜெர்மன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்தார்கள் என்று தெரியவந்து இருக்கின்றது.
கடந்த ஆண்டு அல்லது மாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இது 40.4 சதவீதம் விழுக்காடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆட்கடத்தலில் சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் அகதி அந்தஸ்தை விசாரிக்கும் காலமானது குறைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் ஒன்றை அரசாங்கமானது இயற்றி இருந்தது.
அதாவது தற்பொழுது சராசரி ஒரு அகதி விண்ணப்பத்தை நீதிமன்றம் விசாரிக்கும் காலமானது 20 மாதங்களாக காணப்படுகின்றது.