October 22, 2025
Breaking News
Follow Us
இலங்கை செய்தி

திருகோணமலையில் வாய்க்காலில் விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு

திருகோணமலை- தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக மழைக்காலம் காரணமாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார்.

தந்தை வீட்டின் முன்பாக வாகன பற்றரி மாற்றிக் கொண்டிருந்த போது, சிறுமி அருகில் இருந்துள்ளார். வேலை மும்முரத்தில் மகள் கூட அருகில் இருந்ததை தந்தை கவனிக்க தவறியுள்ளார்.

இந்த சமயத்தில் வாய்க்காலில் சிறுமி சென்றபோது, அவர் அணிந்திருந்த செருப்பொன்று தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.
அதை எடுக்க முயன்றபோது, சிறுமி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்த சிறுமி வாய்க்கால் வெள்ளத்தில் 500 மீற்றர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

சற்று நேரத்தின் பின்னர், பிள்ளையை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். இந்த சமயத்தில் அந்த வீதியின் ஊடாக புல் வெட்ட சென்ற நபரொருவர் சிறுமியின் சடலத்தை அவதானித்து தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டு, பத்தாம் கொலனியில் உள்ள அல் அக்ஸா மையவாடியில் இன்று ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை