2050க்குள் அணுசக்தியை மூன்று மடங்காக உயர்த்த 22 நாடுகள் அழைப்பு
2050 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய அணுசக்தித் திறனை மூன்று மடங்காக உயர்த்த இருபத்தி இரண்டு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த அழைப்பை ஆதரிக்கும் நாடுகளில் பிரான்ஸ், பின்லாந்து, செக்கியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, போலந்து மற்றும் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய அணுசக்தி சார்பு நாடுகள் அடங்கும்.
துபாய்யில் 150க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட காலநிலை உச்சிமாநாட்டில் இதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அமெரிக்க காலநிலைத் தூதர் ஜான் கெர்ரி, “இது முற்றிலும் மற்ற அனைத்து ஆற்றல் மூலங்களுக்கும் ஒரு பெரிய மாற்றாக இருக்கும் என்று நாங்கள் யாரிடமும் வாதத்தை முன்வைக்கவில்லை” என்றார்.
2050 ஆம் ஆண்டுக்குள் உலக அணுசக்தி திறனை மும்மடங்காக உயர்த்துவதற்கு ஆதரவாக ஒரு நிகழ்வில் பேசிய பிறகு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியேறினார்.
இது வெறும் “அறிவியல் உண்மைகள்” – அரசியல் அல்லது சித்தாந்தம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்