மீண்டும் பயணத் தடைகளை எதிர்நோக்கும் சீனா!
																																		சீனாவில் தற்போது பரவி வரும் நிமோனியா நோய் நிலைமை உலகலாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த நோய் தொற்றானது குழந்தைகள் மத்தியில், சுவாச நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கொண்டுவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சீனா மீண்டும் பயணத் தடைகளை எதிர்நோக்கலாம் எனக் கூறப்படுகிறது. மார்கோ ரூபியோ தலைமையிலான ஐந்து குடியரசுக் கட்சி செனட்டர்கள் நேற்று (01.12) அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தைத் தடை செய்யுமாறு ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
“இந்த புதிய நோயினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி மேலும் அறியும் வரை அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பயண கட்டுப்பாடுகள், அல்லது பயணத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன.
வளர்ந்து வரும் நோய்களைக் கண்காணிப்பதற்கான திட்டத்தின் மூலம் தற்போது இனங்காணப்பட்டுள்ள நிமோனியா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் விளக்கம் கோரியுள்ளது.
இதற்கிடையில் தைவான் அரசாங்கமானது வயதானவர்கள், மிகவும் சிறியவர்கள் மற்றும் மோசமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் சீனாவுக்குப் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
        



                        
                            
