இந்தியா

குஜாராத் மாநிலத்தில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேதா மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் முதற் கட்ட விசாரணை முறையில், “கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா” என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத சிரப் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த சிரப்பானது குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டள்ளதாகவும். அதில் அதிகளவிலான விஷத்தன்மை கொண்ட “மெத்தில் அல்கோஹால்” என்கிற வேதியியல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதை எடுத்துக்கொண்ட கிராமவாசிக்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், மெத்தில் ஆல்கோஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா பொலிஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த 2 நாட்களில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பில் கடைக்காரர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!