துண்டு துண்டாக வெட்டி கொலை பாலியல் தொழிலாளி பெண் கைது
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் இவர் சென்னை நங்கநல்லூர் என் ஜி ஓ சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மதியம் நங்கநல்லூர் பகுதியில் உள்ள சகோதரி வீட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்ற பிறகு பணி முடிந்ததும் சொந்த ஊர் விழுப்புரத்திற்கு செல்ல போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் சில நாட்கள் கடந்தும் ஜெயந்தன் திரும்பி வராததால் அவருடைய சகோதரி செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிந்ததும் ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெயந்தனின் சகோதரி அளித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் ஜெயந்தனின் செல்போன் நம்பர் ஆய்வு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி என்ற இடத்தில் சிக்னல் காட்டியது,
அதை எடுத்து கடந்த ஒன்றாம் தேதி தனிப்படை போலீசார் சென்றபோது அங்கு பாலியல் தொழில் செய்யும் பாக்கியலட்சுமி என்ற பெண் இருந்துள்ளார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையின் போது,
முன்னுக்குப் பின் முரணாகவும் ஜெயந்தன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் பாக்கியலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர் அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த தன்னை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் முதலில் சந்தித்தார்,
அப்போது பழக்கம் ஏற்பட்டதாக அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோயிலில் வைத்து தன்னை ஜெயந்தன் திருமணம் செய்து கொண்டார் எனவும் 2021 ஆம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்து புதுக்கோட்டை சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 19 ஆம் தேதி ஜெயந்தன் மீண்டும் தன்னை பார்க்க புதுக்கோட்டை வந்தபோது தகராறு செய்ததால் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டை பையிலும்,
சூட்கேஸில் அடைத்து கடந்த மாதம் 20 மட்டும் 26 ம் தேதிகளில் கோவளம் பக்கிங்காம் கால்வாய் அருகே குழி தோண்டி புதைத்து விட்டேன் இதற்கு புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் தனக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமி கைது செய்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர் ஜெயந்தன் உடலை புதைத்த இடத்தினை பாக்கியலட்சுமி அடையாளம் காட்டுவதாக கூறியுள்ளதால்,
காவல்துறையினர் மற்றும் திருப்போரூர் தாசில்தார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் முன்னிலையில் ஜெயந்தன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தினை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,
ஆனால் இந்த நிமிடம் வரை சம்மந்தப்பட்ட இடத்திற்கு யாரும் வரவில்லை.