போப் பிரான்சிஸின் முக்கிய வெளிநாட்டு பயணங்கள் இரத்து!
போப் பிரான்சிஸின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவரின் துபாய் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், அவர் தனது மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய ஐ.நா.வின் முக்கிய காலநிலைப் பேச்சுவார்த்தைகளுக்கான தனது திட்டமிடப்பட்ட பயணத்தை செவ்வாயன்று ரத்து செய்தார்.
இதற்கிடையில் வரும் வெள்ளிக்கிழமை (01.12) துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே வாடிகனில் இன்று (29.11) இடம்பெற்ற பார்வையாளர்கள் சந்திப்பில், காசா மற்றும் உக்ரைனில் உள்ள போர்களை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தார்,
(Visited 11 times, 1 visits today)





