இலங்கை

ஜனாதிபதி வெளியிலே ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமா? ரவிகரன் கேள்வி

ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கையா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் அவரது அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”கடந்த 27 ஆம் திகதி மாவீரர்தினம் தொடர்பாகவும் சில கருத்துக்களை கூற விரும்புகின்றேன். நாட்டின் அரச தலைவர் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர எவ்வித தடையும் இல்லை என கூறியிருக்கின்றார்.

ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் நெருக்கடியான நிலை காணப்பட்டிருந்தது. துயிலும் இல்லங்களில் தங்களுடைய பணிகளை செய்து கொண்டிருந்த போது பொலிஸாரின் அடாவடி அதிகமாக இருந்தது.

அரச தலைவர் இவ்வாறு கூறிக்கொண்டு அவருக்கு கீழே கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற பொலிஸார் நேரடியாக தங்களுடைய அராஜகங்களை செய்தும் சில இடங்களில் இளைஞர்களை விரட்டியும் இருந்தார்கள் . இவ்வாறாகவே நினைவு நாளை நாம் அனுஷ்டிக்க கூடியதாக இருந்தது.

நீதிமன்ற கட்டளைகள் சிலருக்கு தரப்பட்டிருந்தது. அதன் பின்னர் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்து முல்லைத்தீவு நீதிமன்றில் சட்டத்தரணிகள் இணைந்து திருத்தப்பட்ட கட்டளையாக வழங்கப்பட்டிருந்தது.

இறந்தவர்களை நினைவில் கொள்வதற்கு தற்போதைய அரச தலைவர் கூட இப்படியான நெருக்கடிகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது. தனக்கு கீழ் அரசாங்கத்தில் இருக்கின்ற பொலிஸ் துறை எனில் வேறு அரசாங்கத்திற்கு கீழ் அல்லது வேறு துறைக்கு கீழ் இயங்குகின்றதா? என்ற கேள்வி தான் எங்களுக்குள்ளே எழுகின்றது.

என்னையும் , வீரசிங்கம் அவர்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இப்படியான அடாவடிக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் வந்து உறவுகளை நினைவு கூர்ந்திருந்திருந்தார்கள்.

வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி கொண்டு அவரவர் உறவுகளை நினைவு கூரக்கூடிய வகையிலே அரச தலைவர் அக்கறை காட்ட வேண்டும் அல்லது அதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார கஸ்ரத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழுமே அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். அந்தவகையில் குறுங்கால வாழ்வியல் ஊக்குவிப்பாக 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அரிசி வழங்கும் செயற்திட்டத்தினை தொடர்ந்து செய்து வருகின்றேன்.

இன்றையதினம் 10 கிலோ அரிசி 44 பயனாளிகளுக்கும் இதுவரை 3578 குடும்பங்களுக்கும் வழங்கியிருக்கின்றேன். இன்றைய தினத்திற்கான நிதி உதவியினை திருமதி செல்வரட்ணம் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்” என மேலும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்