தென்னப்பிரிக்கா சுரங்கத்தில் பயங்கரம்! லிஃப்ட் அறுந்து விழுந்து பலியான 11 தொழிலாளர்கள்
தென்னாப்பிரிக்காவில் இயங்கி வரும் பிளாட்டினம் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 11 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும், 75 போ் காயமடைந்தனா்.
தென்னாப்பிரிக்காவின் ரஸ்டன்பா்க் நகரில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளாட்டினம் சுரங்கம் இயங்கி வருகிறது. திங்கட்கிழமை இரவு அந்தச் சுரங்கத்தில் லிஃப்ட் கம்பி அறுந்து, அது 200 மீட்டா் உயரத்திலிருந்து விழுந்தது. இதில் 11 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா், 75 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த 86 பேரும் லிஃப்டில் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பணிநேரம் முடிந்து தொழிலாளா் குழுவினா் மாறும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுவது மிகவும் அபூா்வமானது என கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிளாட்டினம் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டின் பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அவற்றில் அதிக உயிா்ச்சேதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் தென் ஆப்பிரிக்க சுரங்க விபத்துகளில் 49 போ் உயிரிழந்தனா். இருந்தாலும், 2021ம் ஆண்டு சுரங்க விபத்துகளில் 74 பேர் உயிரிழந்தனர்.