சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வரும் AI செயற்கை நுண்ணறிவு முறை!
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு சோதனை நேரத்தை குறைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக, AI மற்றும் X-ray படங்களை தரும் இயந்திரத்தையும் பயன்படுத்தி கைப்பெட்டிகளை செக்-இன் சோதனை செய்யும் முறையை சாங்கி விமான நிலையம் சோதனை செய்து வருகிறது.
இதனால் விமான நிலைய அதிகாரிகளின் செயலாக்க நேரம் குறையும் என்றும், மனித பிழையின் சாத்தியக்கூறுகளையும் அது குறைக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதுவரை, சிகரெட் லைட்டர்கள் அல்லது கூர்மையான பொருள்கள் போன்ற சில தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டறிய AI அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
மேம்பட்ட சோதனை முறை வந்தால், செக்-இன் நேரங்களை பாதியாக குறைக்கலாம் என்று விமான நிலையம் நம்புவதாக தனது அறிக்கையில் கூறுகிறது.
இந்த சோதனை முறை வெற்றி அடைந்துள்ளதாகவும், இந்த செயற்கை நுண்ணறிவு முறை மனித செயல்பாடுகளை விட நன்றாக செயல்படுவதாகவும் அது கூறியுள்ளது.