உலக சந்தையில் தங்கம் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது
ஆறு மாதங்களுக்கும் மேலாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 2000 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2015.09 டொலர்களாக காணப்பட்டதுடன், கடந்த 6 மாதங்களில் 60 டொலர்களாலும், ஒரு வருடத்தில் 261 டொலர்கள் அல்லது 15 வீதத்தாலும் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்க டொலரின் ஒப்பீட்டளவில் பலவீனம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டது ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு உடனடி காரணங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர் 0.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையே இதற்கான காரணம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
(Visited 3 times, 1 visits today)