செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூர் – பான் தீவு அதிவேக வீதியில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய லொரி ஓட்டுநர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி காலை 7:30 மணியளவில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற அவர் பேருந்தில் மோதி விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் லொரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் முகமது ஜாஃப்ரி என்ற 27 வயதான அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பணி முடிந்து வீடு திரும்பும் போது டவர் டிரான்சிட் பேருந்தின் பின்புறத்தில் அவர் மோதியதாக கூறப்பட்டுள்ளது. விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வரின் மண்டை ஓடு மற்றும் விலா எலும்புகள் உடைந்ததாகவும், மேலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னுடைய பெற்றோரின் மூன்று குழந்தைகளில் மூத்தவரான ஜாஃப்ரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, ஒரு வருடத்திற்கு முன்பு தான் சிங்கப்பூருக்கு லாரி ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்தார்.

இவரின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்ததாக அவரின் தந்தை கூறியுள்ளார். அவர் மலேசியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி