வட கொரியாவில் முடி உதிர்தல் அல்லது வழுக்கை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வட கொரியாவில் முடி உதிர்தல் அல்லது வழுக்கை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முடி உதிர்வை ஏற்படுத்தும் தொற்றுகள் உட்பட. “கடுமையான” இரசாயனப் பொருட்களைக் கொண்ட சோப்பு மற்றும் சலவை சோப்புகளைப் பயன்படுத்துவதன் விளைவாகவும் இது இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவைச் சேர்ந்த மருத்துவர் சோய் ஜியோங் ஹூன், தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்று, இப்போது சியோலில் உள்ள பொதுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார்,
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வட கொரியர்கள் “லேசான” இரசாயனப் பொருட்களைக் கண்டுபிடிப்பது “எளிதல்ல” என்று விளக்கினார். சாதாரண குடியிருப்பாளர்கள் முடி உதிர்வு பற்றி கவலைப்பட முடியாது.” சராசரி குடிமகனின் சிகிச்சை செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.