இலங்கை

இலங்கையில் பாராளுமன்ற நெறிமுறை, சிறப்புரிமை குழு கூடவுள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27.11) முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்திற்கு  அதன் தலைவர்  சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய இந்த குழு கூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பான முறைப்பாடுகளை இந்த வாரம் விசேட முன்னுரிமையுடன் விசாரிக்குமாறு அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுத்த அச்சுறுத்தல், இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான முறைப்பாடு என்பன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்குகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!