பிரான்ஸ் தலைநகரில் யூத எதிர்ப்பு தாக்குதல் – அதிரடியாக கைது செய்யப்பட்ட 13 பேர்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூத மதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட 13 பேர்களை பொலிஸாரை கைது செய்துள்ளனர்.
பாரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை சுற்று மதில்களில் மற்றும் பொது இடங்களில் சுவாஸ்திகா லட்சணைகளை ( நாசிப்படையினரின் இலட்சணை) வரையப்பட்டுள்ளது.
மேலும் யூத எதிர்ப்பினைத் தெரிவித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிஸின் பல்வேறு இடங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஏழு பேர் தீவிர வலதுசாரியினர் என அறிய முடிகிறது. அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
அவர்களுக்கு நான்கு மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)