தாய்லாந்தில் மணமகள் உட்பட 5 பேரைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட மணமகன்
தாய்லாந்தில் ஒரு நபர் தனது சொந்த திருமண விருந்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மணமகள் உட்பட நான்கு பேரைக் கொலைசெய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தால் ஒரு ஆணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், மாற்றுத்திறனாளி முன்னாள் ரேஞ்சரும், பாராலிம்பிக் தடகள வீரருமான சதுரோங் சுக்சுக் என அடையாளம் காணப்பட்டார்.
வாங் நாம் கியோ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், மணமகன் 29 வயதான சதுரோங் மற்றும் 44 வயதான மணமகள் காஞ்சனா பசுந்துக் ஆகியோருக்கு திருமண விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த சோக சம்பவம் இரவு 11.25 மணியளவில் நிகழ்ந்தது.
விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வாங் நாம் கியோ போலீசார் அழைக்கப்பட்டனர்.
சதுரோங் மற்றும் காஞ்சனா இடையே ஒரு பாரம்பரிய திருமண விழாவும், அதைத் தொடர்ந்து விருந்தும் நடைபெற்றது.
திடீரென அவர் துப்பாக்கியால் சுட்டதில் மணமகள், அவரது தாயார் கிங்தாங் கிளாஜோ, 62, அவரது தங்கை கோர்னிபா மனாடோ, 38, மற்றும் விருந்தாளியான தோங் நோன்குந்தோட், 50 ஆகியோர் கொல்லப்பட்டனர்.
பின்னர் சதுரோங் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். அவர் உடனடியாக இறந்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து 9 மிமீ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்ட 11 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக வாங் நாம் கியோ காவல்துறைத் தலைவர் போல் கர்னல் ரூங்ஜ்ரோஜ் டாங்-அம்னுவே தெரிவித்தார்.