இலங்கையை மீள் கட்டியெழுப்ப எதிர்கட்சிகளுக்கு அழைப்பு!
ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25.11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பிரச்சினைகள் வந்துவிடும். இந்நேரம் போலல்லாமல் இன்னும் கடுமையானதாக இருக்கும்.
எனது அடுத்த பயிற்சி இது ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது. நாம் இந்த நாட்டின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலத்தை கொடுக்க வேண்டும்.
எங்களிடமிருந்து அனுபவத்தைப் பெறுங்கள், பின்னர் அதிகாரத்தைப் பெறுங்கள். அதைப் பெற அனைவரும் ஒன்றாக இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)