இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர்கள் பதிவேற்றும் ரில்களை நேரடியாக டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் பயனர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. கையில் செல்போனை எடுத்தாலே இன்ஸ்டாகிராமின் உள்ளேதான் அனைவரும் நுழைகிறார்கள். ஏனெனில் நம்மை எப்போதும் என்டர்டெயின்மென்ட் செய்வதற்கு அதில் ரிலீஸ் எனப்படும் சிறிய வகை காணொளிகள் உள்ளது. இவை பார்ப்பதற்கு முற்றிலும் வித்தியாசமாகவும் பொழுதைப் போக்கும் வகையிலும் இருப்பதால் அனைவரும் அவற்றை விரும்பி பார்க்கின்றனர்.
அதேசமயம் பிடித்த ரில்களை டவுன்லோட் செய்து அவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்கும் பழக்கத்தையும் அதிக பேர் வைத்துள்ளனர். ஆனால் இதுவரை இன்ஸ்டாகிராமில் வரும் ரில்களை நாம் அப்படியே நேரடியாக டவுன்லோடு செய்ய முடியாது. அதற்காக பிரத்தியேகமாக உள்ள மூன்றாம் நபர் செயலி மூலமாகவே டவுன்லோட் செய்ய முடியும். இதனால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், இதைப் புரிந்து கொண்ட மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் தளத்திலேயே நேரடியாக ரீல்களை டவுன்லோட் செய்யும் வசதியைக் கொண்டு வந்துள்ளது.
ஆனால் ஒருவர் பதிவேற்றிய ரீலை மற்றொருவர் டவுன்லோட் செய்யும்போது, அதை உண்மையாக பதிவேற்றியவரின் ஐடி வாட்டர்மார்க் முறையில் அதில் குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒருவரின் காணொளியை வேறு ஒருவர் டவுன்லோட் செய்து அவர்களுக்கு சாதகமாக அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளதால், ரீல்சை டவுன்லோட் செய்யும்போது வாட்டர் மார்க்குடன் வரும் என கூறப்படுகிறது.
இதனால் ரிலீஸ் காணொளிகளை டவுன்லோட் செய்து, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்கும் நபர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.