இலங்கையில் 400 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

இலங்கையில் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்கப்படவுள்ளது.
இதற்காக லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 39 times, 1 visits today)