இலங்கை மக்களின் இலவச காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கை மக்களின் இலவச காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் இன்று (25.11) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “குறிப்பாக கலேவெல – தம்புள்ளை – ஹபரணை பிரதேசங்கள் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
ஹிகுராக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இந்த மூன்று நகரங்களும் ஒரு திட்டத்தின் படி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
மேலும், காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் இலவசப் பத்திரங்களாக மாற்றப்படும். அடிப்படைத் திட்டமாக தம்புள்ளை விளையாட்டரங்கில் 10,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.