இலங்கை

முல்லைத்தீவில் மாவீரர்நாள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை

இன்றையதினம் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட வழக்கு இல AR/1400/23 கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீதான கட்டளை ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றைய தினம் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான சில தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவீரர் நாளினை நினைவேந்தல் செய்ய முல்லைத்தீவில் ஆறு பேர் அடங்கிய குழுவினருக்கு தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலையாகி LTTE அமைப்பினை நிறுவிய வேலுப்பிள்ளை பிரபாகரனால் 1989ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 27ஆம் திகதி அவ் அமைப்பில், இருந்து உயிர் இழந்த உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு அக் காலப்பகுதியில் நினைவு கூரும் நிகழ்வு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மணலாறு ஒதுக்கக்காட்டு பகுதியினுள் முதல் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விலே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டதாகவும். விடுதலை புலிகளின் இலட்சினையுடன் இந்த நினைவேந்தல் இடம்பெற வேண்டும் என எழுத்து மூலம் கட்டளையிடப்பட்டிருந்ததாகவும், புலனாய்வு பிரிவினால் உறுதிப்படுத்தபட்டுள்ளதாகவும், எனவே அதன் பிரகாரம் இம் முறையும் விடுதலை புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அணியின் உறுப்பினர்களாக இருப்பவர்களினால் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளின் அமைப்பின், உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியுள்ளதாகவும், எனவே மாவீரர் நினைவேந்தல் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வுக்கு ஏராளமானவர்களை ஒன்றிணைத்து அனுமதி பெறாத ஊர்வலம், பேரணி, கூட்டங்கள்நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, தமக்கு தெரிய வந்ததாகவும்.

மேற்படி இலங்கையிலும், சர்வதேச ரீதியிலும் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளின் அமைப்பின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துதல் யுத்த நிலை மறந்து அமைதியாக வாழும் பொது மக்கள் மத்தியில் மீளவும் யுத்த LD601 போக்கினை உருவாக்கும் எனவும். இனங்களுக்குக்கிடையே அமைதி குலைவு ஏற்படும் என கூறியிருந்தார்.

தொடர்ந்து CA(WRIT) 737/23 என்ற மேல் முறையீட்டு நீதிமன்ற வழக்கிலே இன்றைய தினம் 01.04.05 ஆம் எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை பிரிவு 106 இன் பிரகாரமும் மேலும் வலுவில் உள்ள சட்டங்களின் பிரகாரமும் நடவடிக்கை எடுப்பதற்கு முதலாம் எதிர் மனுதாரரான பொலிஸ்மா அதிபரும் 04 ஆம் எதிர் மனுதாரரான பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரும் (TID) சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற் கொள்வதாக தெரிவித்து மாவீரர் நினைவேந்தல் என்ற சட்ட விரோத நிகழ்வினை சட்டரீதியாக கடமை புரிபவர்களுக்கு தடைகள், பிரச்சினைகள், மற்றும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் மனித உயிர்கள், பொது சுகாதாரம் பாதிப்பு ஏற்படலாம் எனவும், தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் அமைதி இன்மை அல்லது முறுகல் ஏற்படும் என தெரிவித்து இதனை உடனே தடுப்பதற்கு அவசியம் எனவும் கீழ் பெயர் குறிப்பிடப்படுபவர்களுக்கு தடை கட்டளையினை வழங்குமாறு கோரியதன் அடிப்படையில் நீதிமன்றம் பின்வரும் கட்டளையை பிறப்பித்திருக்கின்றது.

கீழே பெயர் குறிப்பிடப்படும் நபர்களாகிய நீங்கள் 2023.11.24ஆம் திகதி இரவு 09.00 மணி தொடக்கம் 2023.11.27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு மாவீரர் நினைவேந்தல் எனும் பெயரில் நினைவேந்தலை நடாத்துவதற்கும், விடுதலை புலிகளின் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதனால் அதன் உறுப்பினர்களாக இருந்து உயிர் இழந்தவர்களை விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நினைவு கூருவதற்க்கும், விடுதலை புலிகளின் சட்ட ரீதியற்ற குறிக்கோள்களுக்கு வலு சேர்க்கும் வகையில் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கும், விடுதலை புலிகள் அமைப்பின் குறிக்கோள்களாக சொல்லப்படும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட குறிக்கோள்களுக்கு வலு சேர்க்கும் வகையில் விடுதலை புலிகளின் சின்னங்கள், புலி சீருடைகள், புலி சீருடையுடன் கூடிய படங்கள் புலிக் கொடிகள், வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் விடுதலை புலிகள் தொடர்பான பாடல்கள் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களாக வெளிபடுத்தும் பாடல்கள் (சாதாரண சீருடை இல்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக பன்படுத்தும் சீருடையுடனான படங்கள் ஆகியவற்றினை பயன்படுத்தி உயிர் இழந்த விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு அல்லது விடுதலை புலிகள் அமைப்பின் தடை செய்யப்பட்ட குறிக்கோள்களுக்கு ஆதரவு அளிக்கும் அல்லது வலு சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள் செய்வதற்கோ கூட்டங்கள் நடாத்துவதற்கோ, அல்லது உரையாற்றுவதற்கோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடாத்துவதற்கோ மற்றும் பொது அமைதிக்கும். பொது மக்களின் பொது போக்குவரத்திற்க்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேரணிகள், கூட்டங்கள் தொடர்பிலான சட்டங்களிணை மீறும் வகையில் மேற் குறித்த அடிப்படையில் கூட்டங்கள். நினைவேந்தல், பேரணிகள் நடாத்துவதற்க்கும் தடை விதிக்கப்பட்டு குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106(1)3) ஆம் பிரிவின் கீழ் கட்டளையாக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டு கீழ் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

01. முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் அவருடனான குழுவினர்

02. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணை செயற்பாட்டாளர் முத்துக்குமார் வசந்தம் புதுமாத்தளன் முல்லைத்தீவு அவருடனான குழுவினர்

03. முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தையா உதயகுமார் மற்றும் அவருடனான குழுவினர்

04. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவருடனான குழுவினர்

05. சமுதாய செயற்பாட்டாளார் பீட்டர் இளஞ்செழியன் மணல் குடியிருப்பு முல்லைத்தீவு மற்றும் அவருடனான குழுக்கள்

06 முல்லைத்தீவு தமிழ் சங்க தலைவர் கந்தசாமி கௌரிராசா மற்றும் அவருடனான குழுக்கள்

எனினும் உயிர் இழந்தவர்களை விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற ரீதியில் அல்லாது ஆன்மாக்கள் என்ற ரீதியில் மாத்திரம் சட்டத்தினை மீறாத வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பொது அமைதிக்கும். பொது போக்குவரத்திற்கும் பாதிப்பு இல்லாமல் இக்காலப்பகுதியில் நினைவு கூருவதை இக் கட்டளை தடை செய்யாது என விளம்பி கட்டளையாக்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content