இந்திய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை ஜனாதிபதி
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை விமர்சித்த இந்திய அரசாங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.
“இந்தியர்களின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா எங்கள் சாதனையை விமர்சித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்று விக்ரமசிங்க First post.க்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியுள்ளார்.
இதன்போது அவர்மேலும் தெரிவித்த்துள்ளதாவது,
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு போர்க்களமாக மாறக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெற்காசிய அண்டை நாடுகளின் பாதுகாப்பிற்கு தனது நாடு ஆபத்தை ஏற்படுத்தாது என்று உறுதியளித்தார்.
ண்மைக் காலமாக இலங்கையில் உள்ள துறைமுகங்களுக்குச் சீன ‘உளவுக் கப்பல்கள்’ வருகை தந்த விவகாரம் இந்தியாவில் பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும், இருதரப்பு உறவுகளில் இது எந்த எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தாது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
“இந்தியா தனது சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பைக் கெடுக்கும் வகையில் எதையும் செய்ய மாட்டோம். ஆராய்ச்சிக் கப்பல்களில் சோதனை நடத்துவோம் என்று புதுடெல்லியிடம் தெரிவித்துள்ளோம். இலங்கை ஒரு சுதந்திர நாடு, எங்களின் நட்பு ஏன் இந்த விவகாரங்களில் தங்கியிருக்க வேண்டும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.