ஜெர்மனியில் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
ஜெர்மனியில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான முறையிலும் யூதர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது இவ்வாறான ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிராக பல கருத்துக்கள் ஜெர்மன் நாட்டில் முன்வைக்கபட்டுள்ளது. அதாவது யூதர்களுக்கு எதிரான எண்ணங்களை கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்றார்கள்.
இதனடிப்படையில் ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சி பிரதான் கூட்டு கட்சியான SPD கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகர் ஒரு கருத்தை வெளியிடுகையில்,
அதாவது ஜெர்மன் நாட்டில் எவர் ஒருவர் பிரஜா உரிமையை பெற்று இருந்தாலும் கூட இந்த பிரஜா உரிமையை பெறும் பொழுது அவர் பிழையான தரவுகள் அல்லது முற்றுப்பெறாத தரவுகள் அல்லது யூதர்களுக்கு எதிரான தரவுகளை கொண்டு இருந்தால் இவர் தமது ஜெர்மன் பிரஜா உரிமையை பெற்ற காலத்தில் இருந்து பின்வலமாக 10 ஆண்டுகளுக்கு சென்று அவர்களது பிரஜா உரிமையை பறிக்க கூடிய வகையில் ஜெர்மனுடைய பிரஜா உரிமை சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.