அமெரிக்காவில் குடல் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
அமெரிக்கர் ஒருவர் குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரது குடலுக்குள் கண்ட காட்சி அனைவரையும் அதிரவைத்துள்ளது.
Missouri மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது அமெரிக்கர் ஒருவர், குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள், அவருக்கு colonoscopy என்னும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்கள்.Colonoscopy என்பது, ஆசனவாய் வழியாக கமெராவுடன் கூடிய குழாய் ஒன்றைச் செலுத்தி, குடலை பரிசோதிக்கும் பரிசோதனை ஆகும்.
அவரது குடலை கமெரா மூலம் கண்காணித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள், திடீரென அவரது பெருங்குடலில் ஏதோ ஒன்று காணப்படுவதை கவனித்துள்ளார்கள்.அது ஒரு ஈ!அதாவது, வயிற்றுக்குள் செல்லும் எந்த பொருளும், வயிற்றிலேயே அரைக்கப்பட்டு, சிறுகுடலுக்குச் சென்று தேவையான சத்துப்பொருட்கள் உறிஞ்சப்பட்டு, மீதமுள்ள பொருட்கள்தான் பெருங்குடலை அடையும்.
ஆனால், ஒரு ஈ எப்படி முழுமையாக அவரது பெருங்குடலை சென்றடைந்தது என்பது யாருக்கும் புரியவில்லை. இந்த colonoscopy பரிசோதனைக்கு 24 மணி நேரம் முன்பே சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும்.அப்படியிருக்கும்போது, அந்த ஈ எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.