இலங்கை

மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலி ஒன்றில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது

சுமார் 15 வயது மதிக்கத்தக்க யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யானையின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளார்கள்

மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்

இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்

தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானையால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் விவசாயிகளும் மக்களும் அங்கலாய்க்கின்றார்கள்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!