இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : கொழும்பு செல்லும் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

பதுளை – கொழும்பு பிரதான வீதி சீலகம பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட வீதியில் பாரிய கல் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் வீதி போக்குவரத்துக்கு திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே கொழும்பு செல்லும் மக்கள் சீலகம பகுதியில் இருந்து இறங்கி மறுபுறம் சென்று அங்கு நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் ஏறி கொழும்பு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)