ஜெர்மனியில் கட்டணத்தை உயர்த்திய தொலை தொடர்பு நிறுவனம்! மக்கள் எடுத்த நடவடிக்கை
ஜெர்மனியில் Vodafone என்று சொல்லப்படுகின்ற தொலை தொடர்பு அமைப்புக்கு எதிராக பலர் நிர்வாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது இந்த Vodafone என்று சொல்லப்படுகின்ற தொலை தொடர்பு நிறுவனமானது ஜெர்மனியின் 10 மில்லியன் வாடிக்கையாளரை கொண்ட அமைப்பாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டில் இந்த அமைப்பானது அடிப்படை கட்டணமாக 5 யூரோக்களை உயர்த்தி உள்ளது.எஇதனால் வாடிக்கையாளர் பெறும் அதிருப்தியுள்ளதாகவும் Vodafone நிறுவனத்துக்கு எதிராக செயற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிகரிப்பானது சட்ட விரோதமான செயல் என்று பாவணையாளர் பாதுகாப்பு அமைப்பானது வாடிக்கையாளர் சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. Vodafone நிறுவனமானது தாம் இந்த 5 யுரோக்களை அதிகரிப்பதற்கு ஜெர்மன் நாட்டின் பணவீக்கம் அதிரிகரித்ததே காரணம் என தெரிவித்து இருந்தது.
மேலும் இவ்வாறு அடிப்படை கட்டணம் 5 யுரோக்களாக அதிகரித்ததுடன் பாவணையாளர்கள் தமது நிறுவனத்தில் இருந்து விலகும் காலத்தை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாவணையாளர் பாதுகாப்பு அமைப்பானது இந்த விடயமானது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது.