சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
திருட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதில் S$20,000 மதிப்புள்ள ரோலக்ஸ் கையடக்க தொலைபேசி உட்பட தங்கம் மற்றும் வைர நகைகளும் அடங்கும். அவற்றின் மொத்த மதிப்பு S$57,000 ஆகும்.
பொருட்களை அடகு வைத்து, இந்தோனேசியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பியதாக சொல்லப்பட்டுள்ளது.
39 வயதான இந்தோனேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ ஹஸ்துடி என்ற அவர் ஒரு திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மரைன் பரேடில் உள்ள காண்டோமினிய வீட்டில் வசித்த 43 வயதான ஜெர்மன் நபரின் வீட்டு உதவியாளராக பணிபுரிந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
2022 செப்டம்பர் மற்றும் 2023 செப்டம்பருக்கு இடையில், ஸ்ரீ ஹஸ்துடி தனது முதலாளியிடம் இருந்து 66 பொருட்களை திருடியுள்ளார்.
அதில் தங்க கட்டிகள், தங்க நெக்லஸ்கள் மற்றும் தங்க மோதிரங்கள், 4 காரட் வைரத் தோடுகள் மற்றும் S$20,000 மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஆகியவை அடங்கும். சிங்கப்பூரில் உள்ள கடைகளில் சுமார் 30 தடவைகளுக்கு மேல் அவர் பொருட்களை பணத்திற்காக அடகு வைத்துள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பணிப்பெண்ணுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.