ஐரோப்பா செய்தி

பிரித்தானிய மக்களுக்கு முக்கிய மருந்துகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை தேவையில்லாமல் வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol முதல், Lemsip மற்றும் Gaviscon ஆகிய அடிப்படை மருந்துகள், கைவசம் குறைவாகவே உள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.

குழந்தைகளுக்கான மருந்துகள் கூட குறைவாகவே கையிருப்பில் உள்ளதால், மக்கள் தேவையில்லாமல் அவற்றை வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

 

 

பல விடயங்களில் சீனாவை பல நாடுகள் கரித்துக்கொட்டுகின்றன. ஆனால், ஒரு உண்மை என்னவென்றால், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மாத்திரை, அல்லது மருந்துகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உட்பொருள் ஒன்று சீனா மற்றும் இந்தியா முதலான சில நாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது.

ஆக, இப்போது அந்த நாடுகளில் அந்த முக்கிய உட்பொருட்கள் உற்பத்தியில் பிரச்சினைகள் காணப்படுவதுதான் பிரித்தானியாவில் இந்த அடிப்படை மருந்துகள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என மருந்தகங்களின் கூட்டமைப்பின் தலைமை எக்சிகியூட்டிவ் ஆன Dr Leyla Hannbeck கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!