ஐரோப்பா

சுற்றுலா சென்ற ரஷ்யத் தம்பதிக்கு நேர்ந்த கதி

இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு சென்ற ரஷ்யத் தம்பதியின் உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள புனித நகரமான மணிகரன் அருகே உள்ள சிறிய குளத்தில் இரு உடல்கள் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று பார்த்த நிலையில், அங்கே தம்பதியினரின் நிர்வாண உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது. மேலும், அவர்கள் உடல்களில் சில காயங்களும் இருந்துள்ளன.

வீதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலப்பரப்பில் சாலையில் இருந்து இந்த குளத்திற்கு எளிதாக யாரையும் வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருக்க முடியாது என்ற பொலிஸார்? இந்த இடத்தில் யாரையும் இழுத்து வந்ததற்கான அறிகுறிகளும் இல்லை என்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!