செய்தி தமிழ்நாடு

ஆவுடையார் கோவில் வெள்ளாற்று பாலம் அருகில் சாலை மறியல்

ஆவுடையார் கோவில் வெள்ளாற்று பாலம் அருகில் சாலை மறியல்

போக்குவரத்திற்கு லாயக்கற்று சேதமடைந்திருக்கும் குளத்துகுடியிருபு பெருநாவலூர் சாலையை செப்பணிட வலியுறுத்திகிராம மக்கள் சாலைமறியல்-

புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார்கோவிலிருந்து குண்டும் குழியுமாக இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்திருக்கும். குளத்து குடியிருப்பு, பெருநாவலூர் வழியாக செல்கின்ற சாலையை செப்பணிட்டு தரவேண்டும்.

அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை போராட்டம் செய்கின்றபோது உறுதி கொடுத்து நிறைவேற்றாமல், இதுநாள்வரை இழுத்தடித்து கொண்டிருக்கம் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சாலையை உடன்செப்பணிட்டு தரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட துணை தலைவர்.சி.சுப்பிரமணியன் தலைமையில். குளத்து குடியிருப்பு.

க.செல்லராஜ், பெருநாவலூர் கார்த்திகேயன்,. தனியனேந்தல் பாண்டி, மீனாங்குடியிருப்ப அன்பு. அண்ணாநகர் மணிமுத்து ஆகியோர் முன்னிலையில்  அய்பகுதி மக்கள் ஆவுடையார்கோவிலில் இருந்து அறந்தாங்கி செல்லும் அனைத்து வாகணங்களையும் சேதமடைந்திருக்கும் குளத்துகுடியிருப்பு.

பெருநாவளூர் வழியாக அறந்தாங்கி செல்லவைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வீரமுத்து.

ஆகியோர் மறியல் போராட்டம் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை செப்பணிட்டு தறுகிறோம் என்று கூறினர் அதை ஏற்காமல் மறியல் போராட்டம் செய்துவருகின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் பேசிவருகின்றனர்

 

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!