வட அமெரிக்கா

அமெரிக்காவில் துணிக்கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5வயது சிறுமி!

அமெரிக்க நகரம் ஒன்றில், தன் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள Trussville என்னுமிடத்தில், Khloe Teresa Williamson என்னும் சிறுமி தன் அண்ணன் மற்றும் அக்காவுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மாயமாகியுள்ளாள்.அதன் பிறகு, அவள் அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் சுயநினைவின்றிக் கிடப்பதை அவளது பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

உடனடியாக Khloeயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.Khloe இறந்தது விபத்து என கருதப்படும் நிலையில், அவளது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்தும், அவள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரவில்லை. எனவே, கூடுதல் பரிசோதனைகளை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Khloeயின் மரணம் அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பொலிஸார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

 

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!