காசா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்த உள்ளது
காசா பகுதியின் தெற்கு பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றிரவு இஸ்ரேலிய இராணுவம் முக்கிய நகரங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, தெற்கு கான் யூனிஸ் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கான் யூனிஸ் தெற்கு காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரம். அந்நகரின் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கு அருகில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கான் யூனிஸில் பல தற்காலிக முகாம்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக காசா பகுதியில் உள்ள நிலத்தடி ஹமாஸ் இலக்குகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மூத்த ஹமாஸ் தலைவர்களே இலக்கு என்று கூறியுள்ளனர்.