மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்ககோரி பொலிஸாரினால் விடப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்ககோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரின் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைவிதிக்குமாறு கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது.
”வவுணதீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த புலனாய்வாளர்கள் இரகசிய தகவலை தங்களுக்கு கொடுத்ததாக கூறி இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரின் பெயர்கள் அதிலே குறிப்படப்பட்டிருந்தாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஒரு குறித்த இடத்திலே நினைவேந்தல் நிகழ்வினை செய்வதற்கு தயாராகின்றனர் என்றும் அதனை தடுக்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள் நான் நீதிமன்றிலே வேறு ஒரு வழக்கிற்காக சென்றிருந்த நிலையில் அந்த வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களுக்கா ஆஜராகி அந்த விண்ணப்பத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். நீதிவான் நீதிமன்றிலிருந்து மற்றை சட்டத்தரணிகளுடனும் என்னுடன் ஆஜரானார்கள்.
நாங்கள் அதனை வலுவாக எதிர்த்து நினைவேந்தல் செய்வது அனைவரதும் அடிப்படை உரிமை,இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது,விளக்கேற்றுவதை எந்த சட்டத்தினாலும் தடுக்கமுடியாது என்றும் குற்றவியல் நடவடிக்கை கோவை 106 பிரிவின் கீழே புதிய தொல்லையை அகற்றுவதற்காகவே உள்ளது எனவும் இவ்வாறானவற்றுக்கு அது பொருத்தமற்றது என்பதையும் எடுத்துச்சொன்னோம்.
விண்ணபங்கள் அடிப்படை உரிமையை மீறுகின்ற மாதிரியான விண்ணப்பங்கள் என்பதை தெரிவுபடுத்தியபோது நீதிவான் அதனை நிராகரித்து கட்டளையிட்டார்.
அதேபோன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் அந்த வாரம் முழுவதும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாட முயற்சிகள் நடப்பதாகவும் அதனை தடுக்கவேண்டும் எனவும் பொலிஸார் கோரியிருந்தனர்.
ஆதற்கும் நாங்கள் சமர்ப்பணங்களை செய்தோம்.யாரது பிறந்த நாளைக்கொண்டாடுவதற்கு யாருக்கும் உரிமையுண்டும்.இறந்தவர்கள் நினைவாக நினைவேந்தல் நடாத்துவதற்கும் உரிமையுண்டு.அதனை எந்த சட்டத்தினாலும் தடுக்கமுடியாது வாதங்களை முன்வைத்த பிறகு நீதிவான் அந்த வி;ண்ணப்பத்தையும் நிராகரித்தார்.
நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.எந்தவித தடைகளும் இன்றி நினைவேந்தல்களை செய்யமுடியும்.” என்றார்.