ஐரோப்பா

ஐரோப்பிய பைக் சந்தையில் களம் இறங்கும் TVS Motors

TVS Motors நிறுவனம் முதல் முறையாக ஐரோப்பிய பைக் சந்தையில் நேரடியாக ஜனவரி 2024 ஆம் ஆண்டு முதல் களம் இறங்கவுள்ளது.

இதற்காக 100 ஆண்டுகள் பழைய நிறுவனமான Emil Frey உடன் இணைந்துள்ளது.

அதாவது ஐரோப்பாவில் உள்ள Emil Frey நிறுவனத்துடன் டிவிஎஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து டிவிஎஸ் மோட்டார் பங்கின் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது 2 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.712.70 என்ற நிலையில் வர்த்தகமானது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்கு விலை நவம்பர் மாதத்தில் மட்டும் 7% விலை உயர்ந்துள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பங்கின் விலை 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

முதலில் பிரான்ஸ் நாட்டில் டிவிஎஸ் பைக்குகளை களம் இறங்கவுள்ளது. ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா நாடுகளில் பைக்குகளை விற்பனை செய்துவருகிறது என்பது. குறிப்பிடத்தக்கது

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்