செய்தி தமிழ்நாடு

சீட் பிடிப்பதில் மாறி மாறி செருப்படி

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கொய்யா வியாபாரி சியாமளா மற்றும் ஓராஜாபாளையம் பகுதியை சேர்ந்த  தனியார் கேண்டினில் பணிபுரியும் ராணி ஆகிய இருவரும் மாதனூர் பகுதியில் வேலை செய்து வருகின்றனர்.

தினமும் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து மாதனூர் பகுதிக்கு வந்து தங்களது பணிகளை முடித்துக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.  நேற்று மாலை இருவரும் குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணித்துள்ளனர்,

அப்போது ராணி முதலில் பஸ்சில் சீட் பிடித்து அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது பின்னர் ஏறிய கொய்யா வியாபாரி சியாமளா அருகில் அமர சென்றபோது வேறொருவர் வருவதாக கூறிவிட்டு சீட்டில் அமர விடாமல் தடுத்துள்ளார் இதனை அடுத்து நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருந்தார் சியாமளா.

பேருந்து சில கிலோமீட்டர் நகர்ந்த பின்பு வேறு ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண்மணிக்கு இருக்கையில் அமர்வதற்காக ராணி இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது,

இதனால் ஆத்திரம் அடைந்த சியாமளா பேருந்தின் உள்ளேயே கண்டக்டரியும் இருக்கை தர மறுத்த ராணியும் கண்டபடி வசை பாடத் தொடங்கியுள்ளார். வார்த்தை போர் முற்றவே ஒரு கட்டத்தில் இருவரும் பேருந்தின் உள்ளேயே மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்டுள்ளனர்.

இதனால் சக பயணிகள் பேருந்து நிறுத்திவிட்டு இருவரில் ஒருவரை கீழே இறங்குமாறு வற்புறுத்தி உள்ளனர் மேலும் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்குமாறு நடத்துனரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நடத்துனர் இடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் பின்னர் சக பயணிகள் இரண்டு பெண்களையும் கண்டித்து இருவரையும் அழைத்து சென்று வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு இருவரையும் போலீசார் பொதுவெளிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக விளைவிப்பது குற்றம் இனிவரும் காலங்களில் இது போன்று செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அரசு பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் மாறி மாறி செருப்பால் அடித்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி