இரு தசாப்பதங்களுக்கு முன் ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது!
அல்கொய்தா அமைப்பின் மறைந்த தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு எழுதிய கடிதம் ஒன்று மீண்டும் டிக்டொக் சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
குறித்த கடிதமானது மிகப்பெரிய தாக்குதல்களின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த கடிதத்தால் மீண்டும் ஒரு வன்முறை தோற்றம் பெறும் என எதிர்வுக்கூறப்படுவதுடன், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடிதமானது கடந்த இரண்டு தசாப்தங்கள் பழையதாக இருந்தாலும், டிக்டொக்கில் புதிய பயனர்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் #lettertoamerica என்ற ஹேஷ்டேக்கையும் கொண்டுவந்துள்ளது.
நன்றி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
(Visited 11 times, 1 visits today)





