சீனாவில் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து – 19பேர் உடல் கருகி பலி !

சீனாவின் லியுலியாங் நகரில் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான கட்டம் ஒன்று உள்ளது.
5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் 2வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
(Visited 12 times, 1 visits today)